கொல்லிமலையில் தரமில்லாமல் கட்டப்பட்ட கதிரடிக்கும் களத்தை இடிக்க உத்தவிட்ட எம்பி

கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பொறியாளர்களுடன் சென்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பின ஏ.கே.பி.சின்ராஜ் ஆய்வு செய்தார்

Update: 2022-09-25 06:00 GMT

கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் சென்று ஆய்வு செய்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பின ஏ.கே.பி.சின்ராஜ்

கொல்லிமலையில் தரமில்லாமல் கட்டப்பட்ட கதிரடிக்கும் களத்தினை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு  நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர்சின்ராஜ்  உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் குண்டூர்நாடு ஊராட்சியில் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் சென்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பின ஏ.கே.பி.சின்ராஜ்  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது குண்டூர்நாடு ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற கதிரடிக்கும் களத்தின் கட்டுமான பணிக்கு தரமில்லாத, மலிவான விலையில் கிடைக்கும் சிமெண்ட் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கான்கிரீட் தரம் மற்றும் உயரம் அரசு நிர்ணயித்த அளவையும் பின்பற்றாமல் இருந்த காரணத்தினால் தரமில்லாமல் கட்டப்பட்ட கதிரடிக்கும் களத்தினை முழுவதும் இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதால்  ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News