நாமக்கல் பகுதியில் ஆவணம் இன்றி இயக்கிய 82 மோட்டார் வாகனங்கள் பறிமுதல்

வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய திடீர் சோதனையில், முறையான ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 82 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-13 00:30 GMT

பைல் படம்.

சென்னை போக்குவரத்து கமிஷனர் மற்றும் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துறை மூலம் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. நாமக்கல் தெற்கு, ஆர்டிஓ அலுவலர் அதிகாரிகள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், திருச்செங்கோடு, ராசிபுரம், ப.வேலூர் ஆகிய ஆர்டிஓ அலுவலகங்களில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், சரவணன், உமா மகேஸ்வரி, நித்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் மோட்டார் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

மொத்தம், 3,935 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 882 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூ. 11 லட்சத்து 16 ஆயிரத்து 257 வரியும், 10 லட்சத்து 72 ஆயிரத்து 200 ரூபாய் இணக்கக் கட்டணமும் வசூல் செய்யப்பட்டது. அதேபோல், 394 வாகனங்களுக்கு ரூ. 24 லட்சத்து 67 ஆயிரத்து 100 இணக்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. வாகன தணிக்கையின் போது, போதிய ஆவணங்களான தகுதிச்சான்று புதுப்பிக்காமல், அனுமதிசீட்டு இல்லாமல், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 82 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு ஆர்டிஓ அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News