போதை பொருட்களுக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி: 450 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Update: 2022-08-20 02:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு, மினி மாரத்தான் போட்டியை, போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி துவக்கி வைத்தார். அருகில் டிஎஸ்பி சுரேஷ்.

நாமக்கல்லில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இயற்கையை காப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாவட்ட போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், இளையோருக்கான மினி மாரத்தான் போட்டி, நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஓட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் பேரணியுடன் இணைந்து சென்றனர். நாமக்கல் பார்க் ரோட்டில் துவங்கிய பேரணி, எஸ்.பி.புதூர் வழியாக பெரியப்பட்டி வரை 4 கி.மீ தூரம் நடைபெற்றது.

இந்த இளையோர் மாரத்தான் போட்டியில், 10 முதல், 16 வயதுக்கு உட்பட்ட 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட விளையாட்டு- இளைஞர் நல அலுவலர் கோகிலா பரிசு வழங்கினார். முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 மற்றும் நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News