நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-12-31 10:15 GMT

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூரை சேர்ந்தவர் கணபதி (52). கூலித்தொழிலாளி. இவருடைய தம்பி விஜயகுமார் (38). இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு அவர்களுக்கு சொந்தமான பழைய வீட்டில் இருந்து மின்இணைப்பு கொடுப்பதற்காக கணபதி பழைய வீட்டில் வயரை மாட்டி உள்ளார்.

ஆனால் மெயின் சுவிட்ச்சை ஆப் ஆப் செய்யாமல் கவனக் குறைவாக வயரில் உள்ள கம்பியை எடுப்பதற்காக வாயில் வைத்து கடித்து உள்ளார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய கணபதியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விஜயகுமார் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News