ரேசன் கடையில் கைரேகை முறையை கைவிடக் கோரி மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை முறையை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-07 11:45 GMT

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை முறையை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கும்போது, கை ரேகை வைக்கும், பயோ மெட்ரிக் முறையை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

ரேசன் கடையில் அத்தியாவசிய பொருட்களை கூடுதலாக வழங்க வேண்டும். உணவு பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருலிட்டர் ரூ.15 விலையில் மண்ணெண்ணை வழங்கிடவேண்டும், மானிய விலையில் கேஸ் வழங்கிட வேண்டும் எ ன்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள, பள்ளிபாளையம், ராசிபுரம், எலச்சிபாளையம், வையப்பமலை, புதுச்சத்திரம், பெரியமணலி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டத் தலைவர் ராணி, செயலாளர் அலமேலு, பொருளாளர் புஷ்பலதா, துணைத் தலைவர் பழனியம்மாள் உள்ளிட்டோர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News