குரூப் 2 போட்டி தேர்வு: நாமக்கல்லில் 3,975 பேர் ஆப்சென்ட்

நாமக்கல்லில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வில் 27,884 பேர் கலந்து கொண்டனர். 3,975 தேர்வர்கள் ஆப்சென்ட்.

Update: 2022-05-21 07:45 GMT

நாமக்கல் மாவட்டம் களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு மையத்தை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வில் 27,884 பேர் கலந்துகொண்டனர். 3,975 தேர்வர்கள் ஆப்சென்ட்.

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, குரூப் - 2ஏ பணியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு மொத்தம் 31,854 விண்ணப்பித்து ஹால் டிக்கட் பெற்றனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக, நாமக்கல் பகுதியில் 50 தேர்வு மையங்களும், ராசிபுரம் பகுதியில் 29 தேர்வு மையங்களும், திருச்செங்கோடு பகுதியில் 26 தேர்வு மையங்களும் என மொத்தம் 105 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணி முதல் மையங்களில் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வுகளின் கண்காணிப்பு பணிகளில், 20 தேர்வர்களுக்கு தலா ஒரு அறை கண்காணிப்பாளரும், 105 தேர்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர்களும், ஒவ்வொரு மையத்திற்கும் தலா 2 ஆய்வு அலுவலர்கள் என 210 ஆய்வு அலுவலகர்ளும், சப் கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 11 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் பகுதியில் தேர்வுக்கு மொத்தம் 15,360 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 13,413 பேர் தேர்வு எழுதினார்கள், 1947 பேர் தேர்வுக்கு வரவில்லை. ராசிபுரம் பகுதியில் மொத்தம் 8,576 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 7,585 பேர் தேர்வு எழுதினார்கள், 991 பேர் தேர்வுக்கு வரவில்லை. திருச்செங்கோடு பகுதியில் மொத்தம் 7,923 பேர் பதிவு செய்திருந்தனர், இவர்களில் 6,886 பேர் தேர்வு எழுதினார்கள், 1037 பேர் தேர்வுக்கு வரவில்லை. 3 இடங்களிலும் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 31,859 பேர் ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். இவர்களில் 27,884 பேர் தேர்வு எழுதினார்கள், 3,975 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.

Tags:    

Similar News