அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு வரும் 24ம் தேதி இடமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வரும் 24ம் தேதி தொடங்குகிறது.

Update: 2022-01-22 12:00 GMT

பைல் படம்.

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கலந்தாய்வு எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜன. 24 முதல் பிப். 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தாங்கள் பணியாற்றிய பள்ளிகளில் ஓராண்டு பணி நிறைவு செய்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஜன. 27 முதல் பிப். 18ம் தேதி வரையில் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கான உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு 24ம் தேதி முதல் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்திலும், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 27ம் தேதி முதல் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, டிஇஓக்கள் நாமக்கல் ராமன், திருச்செங்கோடு விஜயா ஆகியோர் செய்துள்ளனர். 

Tags:    

Similar News