டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு: மத்திய அரசுக்கு கோரிக்கை

டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-05-20 00:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற டயர் ரீட்ரேடிங் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில், சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேசினார்.

தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் நிறுவன உரிமையாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்துப் பேசினார். கூட்டத்தில், கொரோனா கால கட்டத்தில் மோட்டார் தொழில் சரிவர இயங்காததால் ரீட்ரேடிங் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டயர் ரீட்ரேடிங்கிற்கு பயன்படுத்தப்படும் ரப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இத்தொழிலில் கடும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவந்து இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களை காக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். ரீட்ரேடிங் தொழிலுக்கு சிறுதொழில் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். ரீட்ரேடிங் தொழிலின் சிரமத்தை உணர்ந்து மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும்.

நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரிங்ரோடு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் சொக்கலிங்கம், நாமக்கல் மாவட்ட தலைவர் விமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் லோகு, ரவி உள்பட திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News