அரசு காப்பீடு அட்டையுடன் வருவோருக்கு சிறந்த சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

தமிழக அரசின் மருத்துவக்காப்பீடு அட்டையுடன் வரும் கொரோனா நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனைகள் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-01 07:37 GMT

நாமக்கல் மாவட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன், கொரோனா சிகிச்சைகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்,  வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அருகில் கலெக்டர் மெகராஜ்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் நிகழ்வு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் ஆக்ஸிஜன் அளவு மிகக்குறைவான நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 2,500 பல்ஸ் ஆக்ஸி மீட்டர்களுடன் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா, ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு உள்ளது என பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார் ஆஸ்பத்திரிகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக வழங்க கேட்டுக் கொண்ட நிலையில் 61 சதவீதமாக, 772 படுக்கைகளை வழங்கியதற்காக நன்றியை தெரிவிக்கின்றேன். முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் தற்போது 86 நோயாளிகளுக்கு கொரோனா நோய்த் தொற்றிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மருத்துவக்காப்பீடு திட்ட அட்டையுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை, சிகிச்சைக்கு அனுமதித்து சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ துர்கா மூர்த்தி, மருத்துவத்துறை இணை இயக்குநர் சித்ரா, தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் டாக்டர் ரெங்கநாதன், பிஆர்ஓ சீனிவசான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News