திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி வருகிறது - தங்கமணி

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.

Update: 2022-03-14 12:00 GMT

முன்னாள் அமைச்சர் தங்கமணி.

தமிழகத்தில் தி.மு.க அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், மாடகாசம்பட்டியில், அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. ப.வேலூர் எம்எல்ஏ சேகர், நாமக்கல் முன்னாள் எம்எல்ஏபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான, தங்கமணி எம்எல்ஏ செய்தியளர்களிடம் கூறியதாவது:

உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் கட்சியைவிட்டு செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள், கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை. சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக அறவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. மாநிலம் முழுவதும், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, சாராயம், லாட்டரிசீட்டு விற்பனை அதிகளவில் நடக்கிறது. பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க, ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்கின்றனர். மக்களுக்கான தேவைகளை அறிந்து அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

Tags:    

Similar News