நாமக்கல் அருகே கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில், புதிய கொரோனா சிகிச்சை மையத்தை, எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

Update: 2021-05-27 10:45 GMT

நாமக்கல் அருகே 60 படுக்கை வசதியுடன் புதிய கொரோனா சிகிச்சை மையத்தை எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் பார்த்திபன் ஏற்பாட்டில், திருச்செங்கோடு ரோட்டில் எர்ணாபுரம் அருகே உள்ள தீப்தி நர்சிங் கல்லூரி வளாகத்தில், 60 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார். பின்னர், மையத்தில் உள்ள வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் நடராஜ், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ரங்கநாதன், தொழிலதிபர் துரை, கணேசா டிரான்ஸ்போர்ட் கார்த்தி, கல்லூரி முதல்வர் மகாலட்சுமி, சிகிச்சைப்பிரிவு டாக்டர்கள் விவேக், சரத், ராகுல், அபிலேஷ், சுஜித் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கொரோனா சிகிச்சை மையம் திறப்புக்கான ஏற்பாட்டினை, ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பார்த்திபன் செய்திருந்தார்.

Tags:    

Similar News