நாமக்கல்லில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாட்டம்

நாமக்கல்லில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-18 02:00 GMT

நாமக்கல்லில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. கோட்டை மணிவண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். நகராட்சி கவுன்சிலர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுவாமி விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. விஸ்வகர்மா சமுதாய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், சங்கர், செல்வராஜ், வக்கீல் கே.மனோகரன், மணி பாரதி, சண்முகம், தியாகராஜன், மணிகண்டன், மணி, பூபதி, சின்னமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News