மொபைல் மெடிகேர் யூனிட் நடத்துவதற்கு தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

Application Invited For Mobile Medicare Unit நாமக்கல் மாவட்டத்தல் மூத்த குடிமக்களுக்கான மொபைல் மெடிகேர் யூனிட் நடத்துவதற்கு, அனுபவமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென கலெக்டர்விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-31 07:15 GMT

மொபைல் மெடிகல் கேர் யூனிட் வாகனம் (கோப்பு படம்)

Application Invited For Mobile Medicare Unit

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியான மெபைல் மெடிகேர் யூனிட், Mobile Medicare Unit (MMU)  திட்டம் தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை, மகளிர் திட்ட உரிமைத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு நேரடியாக மருத்துவ வசதியினை வழங்கும் வகையில், டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், பிசியோதெரபிஸ்ட், யோகா பயிற்சியாளர், டிரைவர், சமூக சேவகர் உள்ளிட்ட பணியாளர்களைக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டாரத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்த மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலனில் அனுபவமிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி மொபைல் மெடிகேர் யூனிட்டில், மேற்கண்ட பணியிடங்களுடன் கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்களுடன், நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலரிடம் வருகிற ஜன. 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களைப் பெறுவதற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில், செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News