ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க 15 தனிப்படை: நாமக்கல் எஸ்.பி தகவல்

புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-07 14:00 GMT

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி.

புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி கூறுகையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே, பெருமாள்கோயில்மேட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 4ம் தேதி நள்ளிரவில் அந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்மநபர்கள் அதன் அலாரம், சிசிடிவி கேமிரா இணைப்புகளை துண்டிப்பு செய்தனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து உள்ளிருந்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்ளிட்டோர் உள்ளனர். வட மாநிலக் கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருந்தால் போலீசாருக்கு உதவியாக இருக்கும். நள்ளிரவு நேரங்களில் ஏடிஎம் மையங்களை மூடுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags:    

Similar News