பைக் விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு

நாமக்கல்லில் பைக் விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

Update: 2022-03-01 13:30 GMT

நாமக்கல்லில் பைக் விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

வாகன உரிமையாளர்கள் தங்களது பெயரிலேயே ஆர்டிஓ அலுவலகத்தில், வண்டியின் பதிவுச் சான்று (ஆர்சி) பெற்று, டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருந்தால், அவர்கள் வாகன இன்சூரன்சுடன் சேர்த்து, கட்டடாயமாக 15 லட்சத்திற்கு தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்று, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏஐ) அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய அளவில் பொதுகாப்பீட்டுத் துறையில் முதலிடம் வகிக்கும், பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனியின் நாமக்க்கல் கிளை அலுவலகம் மூலம், சமீபத்தில், டூ வீலரில் சென்றபோது, சாலை விபத்தில் உயிரிழந்த, வாகன உரிமையாளர்கள் ஒருவந்தூரைச் சேர்ந்த சதீஸ், வெண்ணந்தூரைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு, தலா ரூ. 15 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கியுள்ளது. நாமக்கல் முதுநிலை கோட்ட மேலாளர் சிவலிங்கம் இதற்கான காசோலையை வழங்கினார்.. நிகழ்ச்சியில் இணை மேலாளர் வினோபா, துணை மேலாளர்கள் ராஜாங்கம், ஸ்வர்ணலட்சுமி, நிர்வாக அதிகாரி லோகேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News