நாமக்கல்லில் துணை ராணுவபடை அணிவகுப்பு

Update: 2021-03-03 11:30 GMT

நாமக்கல்லில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துணை ராணுவபடை அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ படையினர் 100 பேர் நாமக்கல் வந்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்களிடையே அச்சத்தை போக்கவும், சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்தவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெறும். அதன்படி நாமக்கல் நகரில் துணை ராணுவ கம்பெனி மற்றும் மாவட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நாமக்கல் காவல்நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பு திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் ரோடு, மோகனூர் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்கா சாலை என 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதனை ஏடிஎஸ்பி ரவி கொடியசைத்து தொடங்கி வைக்க 70 துணை ராணுவத்தினரும், 60 காவல் துறையினர் என 130 பேர் பங்கேற்றனர். மத்திய பாதுகாப்பு படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி மிடுக்காக அணிவகுத்து வந்தனர்.இதேபோல் மாவட்டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News