உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2.37 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-01 08:27 GMT

நாமக்கல்லில் உரிய ஆவணங்களின்றி கோழி பண்ணையாளர் எடுத்துச்சென்ற ரூ 2.37 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளனர். இதன் கீழ் நாமக்கல் அடுத்த கொண்டி செட்டிபட்டி குனியமரத்தான் கோவில் அருகே வட்ட வழங்கல் அலுவலர் ரவி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்பர் ரைட், தலைமை காவலர் சிவக்குமார், காவலர் கண்மணி அடங்கிய பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பரளியை சேர்ந்த கெளரிராஜன் என்பவரின் காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி 2 இலட்சத்து 37 ஆயிரத்து 440 ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்று கொண்ட அலுவலர் அதனை மாவட்ட கருவூலத்தில் செலுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது உரிய ஆவணங்களை வழங்கி அந்த பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News