மயிலாடுதுறை அருகே 300 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மயிலாடுதுறை அருகே மல்லியம் ஊராட்சியில் நடவு செய்யப்பட்ட 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரிழ் மூழ்கி சேதம் அடைந்தன.

Update: 2021-10-13 17:09 GMT
நீரில் மூழ்கிய நெற்பயிரை விவசாயி காட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மல்லியம் ஊராட்சியில் ஆயிரம் ஏக்கருக்குமேல் சம்பா நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நடவு செய்யப்பட்ட 300 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கியது. வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாராததால் தண்ணீர் வடிய வழியின்றி நடவு செய்யப்பட்ட 7நாள் பயிர்கள் அழுகிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இப்பகுதிக்கு வடிகால் வாய்க்காலாக விளங்கும் 7கிலோ மீட்டர் தூரம் செல்லும் அரையபுரம் வாய்க்கால் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. அப்போது 4கிலோமீட்டர் தூரம் தூர்வாரிவிட்டு எஞ்சிய 3கிலோமீட்டர் தூரத்தை ஒப்பந்த பணியை மேற்கொண்டவர்கள் தூர்வாரவில்லை என்று குற்றம்சாட்டிய விவசாயிகள் பொதுப்பணித்துறையினரிடம் தூர்வார கோரிக்கை விடுத்ததன் பேரில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது. வடிகால் வாய்காலை முறையாக தூர்வாராத ஒப்பந்தக்காரரிடமிருந்து உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என்றும் வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News