முகக்கவசம் அணியுங்க..! அறிவுறுத்திய காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர்..!

Please Wear Mask- காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வும் மனமாற்றமும் ஏற்படுத்தினார், மாவட்ட காவல்துறை எஸ்.பி.சுதாகர்.

Update: 2022-07-04 05:14 GMT

முகக்கவசம் அணிய வலியுறுத்தி காஞ்சிபுரம், மூங்கில் மண்டபம் சிக்னல் அருகே இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை எஸ்.பி.சுதாகர்.

Please Wear Mask- காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அனைவரும் நோய் பரவலை தடுக்க விதமாக முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபங்களில் நூறு பேருக்கு அதிகமாக பங்கேற்க கூடாது. வணிக வளாகங்களில் குளிர்சாதனம் பயன்படுத்த கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை ஆட்சியர் விதித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், பொதுமக்களிடம் முகக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் நகரில் அதிகம் மக்கள் கூடும் பகுதியான மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசத்தை வழங்கினார்.

அரசு பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணித்த பொதுமக்களுக்கு எஸ்.பி சுதாகர், கொரோனா காலத்தில் முகக்கவசம் அவசியம் என்பதை புரியும்படி எடுத்துரைத்தார். இதில், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். அப்போது, முகக்கவசம் உயிர்க்கவசம் எனவும், கொரோனா தொற்றில் இருந்து உயிர்களை காக்கும் எனவும் கூறிய எஸ்.பி சுதாகர், அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணியுங்க...என மக்களிடம் அறிவுறுத்தினார். பலரிடம் மாஸ்க் அணியும் மனமாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே, போதை பொருள் விற்பனையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறவே தடுத்து, இரும்புக்கரம் கொண்டு சட்டப்படி அடக்கிய எஸ்.பி.சுதாகர், மக்களை எளிமையான முறையில் பொது இடங்களில் சந்தித்து, காவல்துறை உயரதிகாரி என்னும் பொறுப்பில் இருந்தும் கூட பந்தா இல்லாமல், மக்களிடம் நெருக்கமாக இறங்கிவந்து பழகுவதும், நேர்மையாக நடவடிக்கை எடுப்பதும் மாவட்ட எஸ்.பி.சுதாகர் மீது மேலும் பலமடங்கு மரியாதையை சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News