வெட்டு காயத்துடன் பாதுகாப்பு கோரி ஏடி எஸ்பி-யிடம் இளம்பெண் மனு

கணவரால் தனக்கும் தன் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து எனக்கூறி, முன்னாள் திமுக ஊராட்சி தலைவர் மீது இளம் பெண் புகார் .

Update: 2022-03-02 23:30 GMT

வெட்டு காயங்களுடன் ஏடிஎஸ்பி யிடம் புகார் மனு அளித்த இளம்பெண் அருணா.

காஞ்சிபுரம் மாவட்டம் , சாலவாக்கம் அடுத்த சின்னாலம்பாடி ஊராட்சியை சேர்ந்த அருணா‌ என்பவர், தனது தாய், தம்பி ஆகியோருடன் வெட்டு காயங்களுடன் வந்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடி.எஸ்.பி.யிடம், நேற்று  புகார்‌ அளித்தார் .

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  சின்னாலம்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ரவி(67) என்பவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2012ல் தன்னை ( அருணா 27 ) இரண்டாவது திருமணம் ‌ செய்து கொண்டார். இருவரும் பெண், ஆண் என இரு குழந்தைகளுடன்  வசித்து  வந்தோம். 

கடந்த ஆண்டு என்னுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் இது குறித்து சாலவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், அவருக்கு சாதகமாக பேசி என்னை அனுப்பி வைத்தனர். இதனால் தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டேன். மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தனர் பேரில்,  காவல் துறையினருக்கு தகவல் அளித்து விட்டு அங்கு சென்றபோது எனது கணவருடன்‌ அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர்.

இதுகுறித்து கேட்டபோது , அருகில் இருந்த ரவி என்பவர் கத்தியால் என்னை வெட்டினார். அதை தடுக்க வந்த எனது தாய்,  தம்பி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. வழக்கறிஞர் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் இங்கு பாதுகாப்பு கோரி மனு அளிக்கிறோம் என்று கூறியுள்ளார். 

மேலும் இவர்,  தமிழக முதல்வர் மனைவி பெயரை தவறாக பயன்படுத்தி காவல்துறையுடன்‌, தன்னை கொல்ல முயற்சி செய்வதாக அதிகாரியுடன் தெரிவித்தார். காவல்துறை அதிகாரி புகார் மனு பெற்றுகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து,  காயங்களுடன் இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News