சிதலமடைந்து குடிநீர் தொட்டி சீர் செய்யப்படுமா ?

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கபட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது.

Update: 2022-03-24 05:00 GMT

அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள சேதமடைந்த குடிநீர் தொட்டி

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வெளிமாநில, மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்தைப் அவர்கள் தங்கள் பயணத்திற்கு பிறகு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் சுகாதார முறையில் கிடைக்கும் வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

தற்போது அந்த குடிநீர் தொட்டி குழாய்கள் உடைந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும் படைப்புகள் அனைத்தும் உடைந்து நீர் வெளியேறி வருகிறது. பொதுமக்கள் குடிநீர் அருந்த ஏதுவாக உடனடியாக அதனை சீரமைப்பு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் எந்த ஒரு குடிநீர் வசதியும் இல்லாததால் உடனடியாக பொதுமக்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைத்து கொடுத்ததை கூட மாநகராட்சி முறையாகப் பராமரிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

Tags:    

Similar News