பெட்டி திறந்தா வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் கட்சி வேட்பாளர்கள்

Update: 2021-05-01 18:35 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

காஞ்சிபுரத்தில் 73.28 சதவீத வாக்குகளும் , உத்தரமேரூரில் 80.05 சதவீத வாக்குகளும் , ஸ்ரீபெரும்புதூரில் 73.94 சதவீத வாக்குகளும் , ஆலந்தூரில் 60.82 சதவீத வாக்குகளும் பதிவாகின .

காஞ்சிபுரம் பொன்னேரிகரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களை, இன்று காலை 8 மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 28 மேஜைகளில் பல சுற்றுகளாக எண்ணபடவுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக முடிவுக்கு காத்திருந்த அரசியல் கட்சியினரிடையே தற்போது சில மணி நேரங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் என்ன என தெரிய வரும் என்பதால் நகர் முழுவதும் அங்காங்கே கூடி பரபரப்பாக பேசி வருகின்றனர்.

4 சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு 75 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் வெற்றி காண்டது யார்? மக்கள் தீர்ப்பு என்ன என்பதை இன்று பார்ப்போம்.

Tags:    

Similar News