வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட இருந்த 56 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட இருந்தவர்களில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-01 05:30 GMT

கொரோனா பரிசோதனை நடைபெற்ற காட்சி.

2021ம் ஆண்டுக்காக தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை அந்தந்த மாவட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி முதல் துவங்க உள்ளது.

இதில் பணிபுரிய உள்ள அரசு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவு சான்றிதழை காண்பித்த பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

அந்தவகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் 2062 பேர் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 56 பேருக்கு நேர்மறை ( பாஸிடிவ்) முடிவுகள் வந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முகாமில் 20 பேருக்கும் , காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்டத்தில் 6 பேருக்கும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்டதில் 12 பேருக்கும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் எடுக்கப்பட்டவர்களில் 8 பேருக்கும், ஆலந்தூர் தொகுதியில் எடுக்கப்பட்டதில் 10 பேருக்கும் என 56 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News