விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடுநிலைப்பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்கல்

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மாகரல் நடுநிலைப்பள்ளிக்கு, கண்காணிப்பு கேமரா, குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

Update: 2021-12-15 11:15 GMT

மாகரல் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்.  

திரைப்பட நடிகர் தளபதி விஜய்யின் 30-வது ஆண்டு திரைத்துறை பயணம் துவங்குவதையொட்டி அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில், காஞ்சிபுரம் அருகே உள்ள மாகரல் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில்,ஓன்றிய தலைவர் ஏவிஎம் வினோத் ஏற்பாட்டின் பேரில் மாகரல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைத்து தரப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை, மாவட்ட தலைவர் காஞ்சி எஸ்.பி.கே தென்னரசு துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களாக பேனா,பென்சில், நோட்டு புத்தகம், உள்ளிட்ட எழுது பொருட்களையும் வழங்கினார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் ராகவ் ஏற்பாட்டின் பேரில், மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 25 இருளர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News