காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் புதன்கிழமை வாகனங்களுக்கு தடை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் அனைவரும் மோட்டார் வாகனங்களை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-12-27 10:45 GMT

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி. 

மாசற்ற அலுவலக வார பயண நாளாக புதன்கிழமையைக் கடைப்பிடிக்கக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், என் அருமை காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து துறை அரசு பணியாளர் நண்பர்களே, காற்று மாசு, சுகாதாரத்திற்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதும் அதனால் உலக அளவில் வருடத்திற்கு 2 மில்லியன் மக்கள் அகால மரணம் அடைகின்றனர் .

படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் என கடைப்பிடித்துத் தனி நபர் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களையும் புதன்கிழமை அன்று தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊக்குவிக்க இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

இது ஒரு சிறு படியென்றாலும் சுற்றுச் சூழலைக் காக்கும் பயணத்தின் துவக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News