காஞ்சிபுரத்தில் தடுப்பூசி தட்டுபாடு, முகாமிற்கு வந்த பொதுமக்கள் அலைகழிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் குறைந்த அளவே தடுப்பூசி செலுத்துவதால் அதிக அளவில் பொதுமக்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-29 05:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக காஞ்சிபுரத்தில் நான்கு இடங்களில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

பொதுமக்களுக்காக பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிடிபிஎஸ் உயர்நிலைப்பள்ளி என இரு இடங்களிலும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் என ஒரு இடத்திலும் திருக்கோயில் பணியாளர்கள் என ஒரு இடத்திலும் என சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 150 நபர்களுக்கும் , ஐஓசி பணியாளர்களுக்கு 65 நபர்களுக்கும் , கோயில் பணியாளர்கள் 50பேர் , பிடிவிஎஸ் பள்ளியில் 150 நபர்கள் என 400 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தவுள்ளது.

இருதினங்களாக முகாம் நடைபெறாத நிலையில் இன்று முகாம் என சமூக வலைதளங்களில் அறிவித்த நிர்வாகம் குறைந்த நபர்களுக்கு என்பதை அறிவிக்க தவறிவிட்டது.

இதனால் பொதுமக்கள் அலைகழிக்கபடுகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இந்நிலையில் பொதுமக்களிடையே அதிகளவில் ஊரடங்கில் பணியாற்றிய சமையல் எரிவாயு விநியோக பணியாளர் , பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் ஆயில் நிறுவனம் மெத்தனம் காட்டியுள்ளது தெரிய வருகிறது.

Tags:    

Similar News