காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தேடும் அவலம்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தடுப்பூசி முகாம் எங்கே என தேடும் அவலம் இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2022-01-29 04:30 GMT

கோப்பு படம் 

காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இங்கிருந்து பல மாவட்டத்திற்கும்,  சென்னை மாநகருக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் பேருந்து பயணத்திற்காக இந்தப் பேருந்து நிலையத்தை நாடி வருகின்றனர் ‌

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20வது தடுப்பூசி முகாம் இன்று மாவட்டத்தில் 395 இடங்களில் நடைபெறும் எனவும்,  பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கான தடுப்பூசி முகாம்கள் சாலையோரம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தாலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கண் பார்வை படாத பாலூட்டும் அறை அருகே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் கடந்த மாதங்களில் கழிவறை அருகே அமைக்கப்பட்டிருந்ததும்,  இது குறித்து சர்ச்சை எழுந்ததால் இடமாற்றம் செய்த பின்,  இப்பகுதிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பார்வைக்கு தெரியாத இடமாக பாலூட்டும் அறை உள்ளது.

பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தால் பேருந்து பயணத்திற்கு முன்பு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதும் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்லும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதைக் கருத்தில் கொள்ளாத மாநகராட்சி, பொதுமக்கள் தேடும் நிலையில் மருத்துவ முகாமை அமைத்துள்ளது வருத்தமான ஒன்று என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

Similar News