கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-07 04:45 GMT

சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கர்ப்பணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 8 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

அதையொட்டி சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தெரிவிக்கையில் ,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் மாவட்டத்தில் 2 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும்,தமிழக அரசு அறிவுறுத்தியதன் பேரில் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது என்றும், தெரிவித்தார்.

மேலும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய் தாக்கம் உள்ள கூடுதல் கவனம் தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளிலும், எவ்வித சிக்கலும் இல்லாத கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மருத்துவர்கள் பார்த்திபன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News