சாலவாக்கம் : சுகாதார அமைச்சருக்கா தாமதமாக துவங்கிய தடுப்பூசி முகாம்

சாலவாக்கத்தில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமில் சுகாதார துறை அமைச்சர் வருகைக்காக பல மணி நேரம் பயனாளிகளை சுகாதாரத்துறை காத்திருக்க வைத்தது.

Update: 2021-10-30 07:00 GMT

சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை காத்திருந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 550க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

பல்வேறு இடங்களில் காலை 7 மணிக்கு துவங்கிய சிறப்பு முகாமில் பொதுமக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் ஊராட்சியில் சிறப்பு முகாம் அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த பொதுமக்கள் அனைவரும் அமர வைக்கப்பட்டு அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். காலை முதலே மெல்ல மெல்ல பொதுமக்கள் வந்த நிலையில் அனைவரையும் அமைச்சர் முன்னிலையில் ஊசி போட சுகாதாரத்துறை அனைவரையும் காக்க வைத்தது.  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பலர் ஏதும் கூற இயலாத நிலையில் பன்னிரண்டு முப்பது மணி அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்தனர்.

தடுப்பூசி செலுத்தி கொள்ள சுமார் 75-க்கும் மேற்பட்டோர் அடையாள அட்டை மற்றும் முதல் தவணை செலுத்தி கொண்ட ஆவணம் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து பல மணி நேரம் காத்திருந்த அவலநிலை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது

Tags:    

Similar News