காஞ்சிபுரத்தில் தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மெகா கெரோனா தடுப்பூசி முகாமை கண்காணிப்பு அலுவலர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-09-12 13:45 GMT

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமினை ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் பா. பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்  ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் பேரூராட்சிகள் பெருநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் 609 மையங்களில் இன்று காலை 7 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்து பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் பா.பொன்னையா  இன்று ஸ்ரீபெரும்புதூர் படப்பை காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விவரங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வந்த அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News