நகர்புற உள்ளாட்சி தேர்தல் : திமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு அளிக்க குவிந்தனர்

காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் இன்று விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-11-24 07:15 GMT

காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களிலும் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ,  274 ஊராட்சிகளில் தலைவர்கள் , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி ,  நகராட்சி ,  பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில்  மாநகராட்சி பேரூராட்சி  ஆகியவைகளில்  போட்டியிடும் விரும்பும் நபர்கள் இன்று முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என மாவட்ட செயலாளர்கள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அறிவித்திருந்தார்.

அதன் வகையில் இன்று காலை முதல் காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகமான அண்ணா பவளவிழா மாளிகையில் திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். மாநகராட்சியில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனு பெற்று ரூபாய் 10 ஆயிரத்துடன் விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து பொறுப்பாளர்களிடம் மனு அளித்தனர்.

தங்கள் பகுதியில் போட்டியிட ஆதரவாளர்களுடன் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மட்டும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. 

Tags:    

Similar News