திறக்கப்படாமல் உள்ள சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம்

இந்திரா நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படாமல், திறக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்தும் வீணாக சேதமடைந்து வருகிறது.

Update: 2023-02-19 13:30 GMT

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்க பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள்.

கோனேரி குப்பம் , இந்திரா நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படாமல், மற்றொரு பகுதியில் திறக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்தும் வீணாக சேதமடைந்து வருகிறது..

கடந்த சில வருடங்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதிகள் அனைத்தும் அதிக அளவில் விரிவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே உள்ள நகர பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிய நிலையில் தற்போது புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு குடியிருப்பு வாசிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் கிராம ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சி நிதியிலிருந்து சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து இருபது லிட்டர் குடிநீர் ரூபாய் ஐந்துக்கு வழங்கும் வகையில் தானியங்கி இயந்திரம் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி குப்பம் ஊராட்சியில் இந்திரா நகர் நடேசன் சாலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் சுமார் 300 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


அதன் அருகிலேயே மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் பொதுமக்களுக்கு பயன்படாமலே சேதமடையும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதே ஊராட்சியில் அசோக் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ளது.


ஒரே ஊராட்சியில் இரு வேறு இடங்களில் புதியது பயன்பாட்டிற்கு இல்லாமல் பயன்பாட்டில் இருந்தது பழுதடைந்தும் இருப்பதை ஊராட்சி நிர்வாகமும் , ஒன்றிய நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு பயன்படுத்த திட்டங்கள் தீட்டப்படும் நிலையில் இது போன்று சில திட்டங்களுக்காக பல லட்சம் விரயம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் பார்வையில் படும் நிலையில் அதிருப்தியை அளித்து வருகிறது.

Tags:    

Similar News