மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி..

Update: 2021-05-10 12:45 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு பொதுமக்கள் பயணிக்க தடை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் நாளான இன்று அத்தியாவசிய கடைகள் தவிர பிற அனைத்தும் மூடப்பட்டது.

பொது மக்கள் பயணிக்கும் பேருந்து ,ஆட்டோக்கள்‌ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அரசு ஊழியர்கள் ‌தங்கு தடையின்றி அலுவலகம் செல்ல காலை 6.00 மற்றும் 7.10 மணிக்கு இரு ரயில்கள் திருமால்பூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

இதேபோல் மாலை வேலைகளும் சென்னை கடற்கரையில் இருந்து  இரயில்கள் காஞ்சிபுரம் வரை இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு , தாம்பரம். , பூந்தமல்லி வழி தடங்களில் அரசு ஊழியர்கள் சென்னை பணிக்கு செல்ல 10 சிறப்பு பேருந்துகள் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது..

Tags:    

Similar News