காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2021-05-18 14:45 GMT

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் கொரோனா  நோய்தொற்று அதிகமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு ரயில்வே சாலையில் இயங்கி வந்த ராஜாஜி காய்கறி மார்க்கெட் சந்தை தற்காலிகமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும் ,  ஓரிக்கை பேருந்து நிலையத்திற்கும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் காய்கறி வியாபாரிகளுக்கு நகராட்சியால் கடை ஒதுக்கீடு செய்த அடையாள அட்டை படியே தற்போதும் பேருந்து நிலையத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ரயில்வே சாலையில் இயங்கி வந்த மளிகை கடைகள் அதே இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்யும் காய்கறிகளை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கேயே  வாங்கி கொள்ளுமாறும் , தேவையற்றது காய்கறி சந்தையில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்படும் காய்கறி கடைகள் வரும் மே 20ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை முதல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News