கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த நீரை துரிதமாக வெளியேற்றிய பேரூராட்சி

உத்திரமேரூர் நகரில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை பேரூராட்சி பணியாளர்கள் ஜேசிபி உதவியுடன் வெளியேற்றினர்

Update: 2021-07-19 13:45 GMT

உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சூழ்ந்த மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட பேரூராட்சி ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானிலை மாற்றம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்திரமேரூர் பகுதியில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக  உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல தாழ்வான பகுதியில் மற்றும் வடிகால் வசதி இல்லாத கக்காநல்லூர் இருளர் காலனி,  அண்ணா நகர் உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் உத்தரமேரூர் பேரூராட்சிக்கு புகார் தெரிவித்தும் பேரில் பேரூராட்சி நிர்வாக தூய்மைப் பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரி மழை நீர் முழுவதையும் துரிதமாக அகற்றினர்.

மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள கால்வாயில் தூர்வாரி மீண்டும் அப்பகுதியை புனரமைப்பு செய்தனர்.

Tags:    

Similar News