காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்து மழைநீர்

காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக சாலையில் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-07-25 13:15 GMT

காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் சாலையில் வெள்ள ஆறாக செல்லும் நீரில் நடந்து வரும் பொதுமக்கள்.

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்று வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராமநாதபுரத்தில் இன்று மழைக்கு அதிகாரிகள் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

தொடர்ந்து 40 நிமிடங்கள் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் வெள்ள ஆறாக பாய்ந்தது.

பேருந்துகள் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கன மழை காரணமாக பெரிதும் அவதிக்குள்ளானர்.

சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் மர கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அனைத்து பகுதிகளிலும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News