இலவசமாக நல்லடக்கம் செய்ய கோரிக்கை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், உயிரிழக்கும் உடல்களை நல்லடக்கம் செய்ய இலவச அனுமதி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2021-05-05 11:15 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தற்போது உள்ள நிலையில் நாள்தோறும் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக வயது முதிர்வு கொண்டவர்கள் தொற்று காரணமாக பெரிதும் அவதியுற்று கடும் துயரத்துடன் மரணமடைகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பால் வியாபாரிகள்‌, அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகி மீண்ட நிலையில் தற்போது இரண்டாவது அலகின் தாக்கம் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.

இவர்களை உடலை சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையிலேயே அவர்களின் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இருப்பினும் இதற்காக தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அவருடைய நல்லடக்கம் பொது இடுகாட்டில் அல்லாமல் பெரும்பாலும் மின் மயானங்களில் நடைபெறுகிறது.

இதற்காக அங்கு செலுத்தப்படும் கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் என குறைந்தபட்சம் ரூபாய் 3500 செலவு செய்யும் நிலையில் பாதிக்கப்பட்டோர் உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கேர் சென்ட்ரில் செய்யும் செலவை அரசு செய்து வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி இறக்கும் நபர்களின் ஏழ்மை நிலை கண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இலவசமாக குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இலவசமாக நல்லடக்கம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News