தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திடீர் அதிகரிப்பு: போதிய இடவசதியின்றி திணறும் கல்வித்துறை..!

Tamil Nadu School News -கொரோனா காலத்தில் தனியார் கல்வி கட்டணத்துக்கு பயந்து, அரசு பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கையை சமாளிக்க போதிய இடவசதி இல்லை என்பதே வேதனையாக உள்ளது.

Update: 2022-06-14 06:30 GMT

காஞ்சிபுரத்தில், மாவட்ட ஆட்சியர் காலனியில், அரசு நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்தனர். இதனால், தரையில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்.

Tamil Nadu School News -தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில்  தொழிற்சாலை பணி ஆட்கள் குறைப்பு, ஊரடங்கு என பலவகையில் நடுத்தர குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை மீட்க பெரிதும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக, தங்களது வருமானம் குறைவாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி குறைவின்றிக் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் தனியார் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்தை அடைந்தனர்.

இதையடுத்து, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை அதிக ஆர்வத்துடன் சேர்த்தனர். கொரோனா காலகட்டத்தில் இருந்து சற்று மீண்டாலும் இன்னும் பெற்றோர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை.

இதனால்; தங்களது குழந்தைகளை பல்வேறு அரசு நல திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் கிடைப்பதால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க தற்போதும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேர்க்கை அனைத்து வகுப்புகளைச் காட்டிலும் அதிகமாக உள்ளது.

இதனால், மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலையே உருவாகி உள்ளது. கொரோனா காலத்தில் தனியார் கல்வி கட்டணத்துக்கு பயந்து, அரசு பள்ளிகளில் திடீரென பலமடங்கு அதிகரித்த மாணவர் சேர்க்கையை சமாளிக்க வகுப்பறைகளில் போதிய இடவசதி இல்லை என்பதே வேதனையாக உள்ளது.

கல்வி சேர்க்கைக்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் பள்ளிக்கல்வித்துறை சேர்க்கைக்கு பின்னர். மாணவர்கள் கல்வி கற்க போதிய வகுப்பறைகளையும், கழிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானத்திற்கு என இட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News