காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் நடந்து வரும் கண்காட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-23 13:30 GMT

காஞ்சிபுரம் கண்காட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக காஞ்சிபுரத்தில்  இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு அமுத பெருவிழா பல்துறை அலுவலகங்களின் சார்பில் கண்காட்சி அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இக் கண்காட்சி அரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளின் திரு உருவப்படம் கண்காட்சி மற்றும் பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த கண்காட்சியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் துறை ரீதியான திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை  தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ. அன்பரசன் துவக்கி வைத்தார். இன்று 2-வது நாளில் காஞ்சிபுரம் நகரில் இயங்கும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி அந்த அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு , சுற்றுச்சூழல் மற்றும் கேடு விளைவிக்கும்  உணவு வகைகள் குறித்து ஆடல் பாடலுடன் நடனமாடி  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைத்துத் தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது.

இதேபோல் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்று சிறப்புகளை பேச்சுக்களாலும் எடுத்துரைத்து விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News