காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை செயல் அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-20 13:00 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோவிலில் அர்ச்சகர்கள் , பணியாளர்கள் , அலுவலக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலில் பணிபுரியும் அனைவருக்கும் முழுஉடல் பரிசோதனை செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு மருத்துவ முகாமில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

சிறப்பு மருத்துவ முகாமில் சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இருதயம்,பொது மருத்துவம்,என பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரத்தப் பரிசோதனை, இசிஜி,எக்கோ, சர்க்கரை,ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். சிலருக்கு நோய் தீவிரம் குறித்து கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். சிறப்பு மருத்துவ முகாமில் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் அலுவலக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News