காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது‌ நாளாக பள்ளிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்

தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கும்‌ பள்ளிகளில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

Update: 2022-09-22 07:30 GMT

வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு காய்ச்சல் கண்டறிய முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே புதிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை நாள்தோறும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவர் கண்டறியும் முகாம் நடைபெறும் என அறிவித்தது.

அவ்வகையில் இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

வாலாஜாபாத் வட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் டிரஸ்ட் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று பயனடைந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் முகாமில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

உடன் துணைத் தலைவர் கோவிந்தராஜன் வார்டு உறுப்பினர் பூபதி , தலைமை ஆசிரியை ஜோசப்பின் நிர்மலா, கிராம பிரமுகர்கள் சேஷாத்திரி நடராஜன், விவசாய வங்கி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News