காஞ்சிபுரத்தில் 2,118 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 2,118 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-06-12 04:15 GMT

காஞ்சிபுரம் குமரக் கோட்டம் முருகன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 2,118 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் இதுவரை 9லட்சத்து 20 ஆயிரத்து 575  பேருக்கு முதல் தவணையும், 7லட்சத்து 36 ஆயிரத்து 58 பேருக்கு  இரண்டாவது தவணையும் மாவட்ட நிர்வாகம் நடத்திய முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிய வகை கொரோனா வைரஸ் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோன காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  இன்று (ஞாயிறு) ஒருநாள் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யட்டது.

இந்த நடமாடும் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2118 இடங்களில் நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், திரையரங்கம் , தேசிய, மாநிில நெடுஞ்சாலை என அனைத்து இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோன நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Tags:    

Similar News