டோக்கன் வழங்குவதாக கூறி‌ நியாவிலை கடை மூடலா ?

தமிழக அரசின் கொரோனா நிவாரண முதல் தவணை டோக்கன்களை வழங்க, ஊழியர்கள் ரேஷன் கடைகள் மூடி செல்வதால் பொதுமக்கள் பொருட்கள் பெற இயலாது நிலை உருவாகியுள்ளது..

Update: 2021-05-11 05:00 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது.  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வாக்குறுதியாக கொரோனா கால நிவாரண நிதியாக ரூ4000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

ஆட்சிக்கு வந்ததும் முதல் தவணையாக ரூ2000 வழங்க உத்தரவிட்டு நேற்று முதல் இதற்கான டோக்கன் நியாய விலை கடை ஊழியர்களால் நாள்தோறும் 200நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக காலை 8மணி முதல் 12மணிவரை நியாய விலை கடை இயங்கும் என அறிவிக்கபட்ட நிலையில் காஞ்சி தேசிகர் கோயில் ஊழியர்கள் டோக்கன் வழங்குவதாக கூறி கடை பூட்டிவிட்டு சென்றனர். 

டோக்கன் பணி 13ம் தேதி வரை வழங்குவும் அதன்பின் பணம் வழங்குதல் தொடர்வதால் பொதுமக்கள் இக்கட்டான சூழ்நிலையில் நியாயவிலை கடைகளில் பொருள் வாங்குவது ஒரு வார காலம் பெரிதும் தடை ஏற்படும்.

எனவே நியாய விலை கடைகளில் பொருள் வழங்க எந்தவித இடர்பாடு இன்றி ஊழியர்கள் பணிகளை தொடர குடிமைப்பொருள் அலுவலர்கள் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். 

Tags:    

Similar News