வழிப்பறி குற்றவாளி கைது :3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மீட்பு

காஞ்சிபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 60 மதிப்பிலான நகைகளை மீட்டனர்.

Update: 2021-12-15 15:30 GMT

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்

காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் அடுத்த சதாசிவம் குணசேகரன் நகரில் வசிக்கும் சிவக்குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி கடந்த 12ஆம் தேதி மதியம் கடைக்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர் வழி கேட்பது போல் நின்று அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்.

இதுகுறித்து விஜயலட்சுமி காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இத் திருட்டு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் காஞ்சிபுரம் பவள வண்ணர் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தன் என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டனர். குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News