அமமுக மகளிரணி பிரமுகர் வீட்டில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் வெள்ளகுள தென்கரை இப்பகுதியில் அமமுக மகளிரணி பிரமுகர் வீட்டில் இருந்து 1.5 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு பறிமுதல் செய்து அருகிலிருந்த நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-10 11:30 GMT

காஞ்சிபுரத்தில் அமமுக மகளிரணி பிரமுகர் வீட்டில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வெள்ளகுள தென்கரை பகுதியில் வசிப்பவர் மாகலட்சுமி. இவர் அமமுக மகளிரணி பிரமுகராக இருந்து வருகிறார். இவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் பிரியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென அவர் வீட்டில் வட்ட வழங்கல் அலுவலர் பிரியா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது வீட்டில் சிறு கோணிப்பைகளில் கட்டி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடையிட்ட போது சுமார் ஒன்றரை டன் ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவ்வீட்டின் அருகில் இருக்கும் நியாய விலைக்கடைகள் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஆய்வு மேற்கொண்டு இருப்பு நிலை மற்றும் விற்பனை முறைகளை ஆய்வு மேற்கொண்டார்.

அமமுக மகளிரணியினர் வீட்டில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News