சங்கரா கல்லூரியில் சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்பு நிறைவு விழா

சங்கரா கலைக் கல்லூரி சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒரு வருடம் நடத்திய சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்புகள் ஓராண்டை நிறைவு செய்துள்ளன.

Update: 2022-05-02 00:00 GMT

 காஞ்சி சங்கர கலைக்கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நடத்திய ஆசிரியர்களுக்கு, பொன்னாடை போர்த்தப்பட்டது

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரி,  சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஒரு வருட சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பினை, கடந்த வருடம் துவங்கியது. நேற்று, அதன் நிறைவு விழா கல்லூரி கூட்டரங்கில்,  கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இப்படி பயிற்சி வகுப்பில் சிங்கப்பூர், இலங்கை, கனடா மற்றும் இந்தியா முழுவதும் இருந்து 129 பேர் ஆன்லைன் வகுப்புகள் மூலம்,  கடந்த ஒரு வருடமாக வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டாலும் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற அனைவரும் நேரடி சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டனர். இதில் 40 நாட்கள் சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துவித சந்தேகங்களும் ஆன்லைன் மற்றும் நேரடியாக தீர்த்து  வைக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில்,  காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி ஸ்ரீ தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் அவர் பேசியபோது,  சைவ சித்தாந்த நெறி என்பது வாழ்க்கைக்கு மிக அவசியமானது. இதைக் கற்று அதன்படி நடந்து கொண்டால் அனைத்தும் இன்பமே  என்றார்.

பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிறைவு விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் சங்கரர் கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் தெய்வசிகாமணி மற்றும் கல்லூரி ஊழியர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

Tags:    

Similar News