மாற்று இடம் வழங்க கோரி குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Collector Petition-தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலம் மேம்பாட்டு பணிக்காக வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-19 08:00 GMT

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வீடுழந்த தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மனு அளித்தனர்.

Collector Petition-காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு vrp சத்திரம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு வேறு எந்த நிலங்களும் இல்லாத காரணத்தால் தற்போது இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

மேற்படி இடத்தை எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள வேறு இடத்தில் மாற்று இடம் வழங்க கோரி‌ காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியரிடம் இன்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

தற்போது பள்ளிகள் படிப்பு இதனால் தடைப்படக்கூடாது எனவும் , தங்களது தொழில் சார்ந்தும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வாழ்வாதாரமும் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் "இ" கிராமத்தில் சர்வே எண் 1516 /1 இல் சுமார் 1.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாகவும் ,  அதனை தங்களுக்கு வழங்க ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News