காஞ்சிபுரத்தில் தெரு விளக்கு கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம் முறையாக பராமரிக்க கோரிக்கை

காஞ்சிபுரம் தெரு விளக்கு, மின் கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம், பராமரிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-07-22 09:15 GMT

மின்சிவு ஏற்படும் வண்ணம் உள்ள தெருவிளக்கு மின் கம்பவம், 

காஞ்சிபுரம் பெருநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் புழங்கும் நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது.

காஞ்சிபுரம் கோயில் நகரம் என்பதாலும் பட்டு சேலை வாங்க பல்வேறு மாநில மற்றும் மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் பெருநகராட்சி தூய்மைப்பணி ,  சாலை விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மின் கம்பங்களை பராமரிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது. குறிப்பாக பிரேக்கர் என கூறப்படும் மின்சாதன பொருளை சரியான முறையில் பராமரிக்காமல் இருப்பதால் மழைக் காலங்களில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகிறது.

மேலும் மின் கம்பங்களை சுற்றி அவ்வப்போது மழைநீர் தேங்கு நிலையில் அதை ஒட்டி செல்லும் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு  மின்சாரம் தாக்கபடுகிறது.

கடந்த வாரம் சாலைத் தெருவில் நான்கு மாத கர்பணி பசு ஒன்று மின்சார தெருவிளக்கு கம்பத்தில் உரசிய போது மின்சாரம் தாக்கி துடிதுடிக்க இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்தது.

அதே இடத்தில் 75 வயது மூதாட்டி மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி நூலிழையில் உயிர் தப்பினார். காஞ்சிபுரம் நகரில் இதுபோன்று பல இடங்களில் உள்ள மின்கம்பத்தில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பகுதியில் போதிய பாதுகாப்பு செய்யப்படாமல் பிளாஸ்டிக் அட்டையால்  மூடி வைத்து நகராட்சி ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்கவும் வரும் காலம் பருவமழை காலம் என்பதால் மனித மற்றும் விலங்குகளின் இழப்பை தவிர்க்க பெருநகராட்சி தெருவிளக்கு கம்பங்களில் முறையாக பராமரிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Tags:    

Similar News