கால்வாய் மீது சாலை: மாநகராட்சி செயல்படுத்தவுள்ள மெகா திட்டம்

பருவ மழை காலங்களில் காஞ்சிபுரம் நகரில் நீர் புகாத வண்ணம் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது மஞ்சள் நீர் கால்வாய் திட்டம்

Update: 2024-02-07 03:49 GMT

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் செல்லும் மஞ்சள் நீர் கால்வாய் குறித்த கழுகு பார்வை படம்

6 கீமீ தூரம்,  ரூ40 கோடி மதிப்பீட்டில் மஞ்சள் நீர் கால்வாய் புணரமைப்பு மற்றும் கால்வாய் மீது சாலை அமைக்கும் பணி .அமைச்சர்கள் நேரு , அன்பரசன் ஆகியோர் சர்வ மத தெய்வ படங்கள் முன் பூஜையிட்டு மகிழ்ச்சியுடன் துவக்கி வைத்துபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் முந்தைய காலத்தில் நகரில் பருவ மழை காலங்களில் நீர் சூழாமல் இருக்க காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் ஆரம்பித்து நகரினுள் பல்வேறு பகுதிகளைக் கடந்து நத்தப்பேட்டை ஏரிக்கு செல்லும் வகையில் மஞ்சில் நீர் கால்வாய் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் உருவாக்கப்பட்டது.

இதனால் கடந்த 2015ல் ஏற்பட்ட பெரு மழையில் நகரில் நீர் சூழ்ந்த நிலையிலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மஞ்சள் நீர் கால்வாயில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவு நீரை இதில் இணைத்தும் , கழிவு பொருட்களை இந்த கால்வாயில் வீசியும் நீர் தங்கு தடை இன்றி செல்ல முடியாத அளவிற்கு செயல்களில் ஈடுபட்டு வந்தது பெரும் இடர்பாடாக மாநகராட்சிக்கு இருந்து வந்தது.

இதனை நீக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் பொறியாளர் குழு மேற்கொண்டது.


அவ்வகையில் மஞ்சள் நீர் கால்வாய் ஆரம்பிக்கும் புத்தேரி பகுதியில் இருந்து கிருஷ்ணன் தெரு,  பல்லவர் மேடு,  காமராஜர்தெரு,  ஆனந்தாபேட்டை , மின் நகர் வழியாக நத்தப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அங்குள்ள ஏரிக்கு செல்லும் வகையில் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் 16 முக்கிய சந்திப்புகளை தாண்டி செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு அதற்காக ரூபாய் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு கோரி நகர் புற வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டது.

சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை மேற்கொள்ள பரிந்துரைத்ததின் பேரில் இத்திட்டத்திற்கு உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த அனுமதி அளித்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

இத்திட்டத்தினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  கே. என்.நேரு ,  தமிழக சிறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

துவக்க விழாவில் சர்வ மத தெய்வங்கள் படங்கள் முன்னிலையில் பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டு , மலர் தூவி திட்டப்பணிகள் துவக்கி  வைத்து, அதனை காண வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அமைச்சர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்தில் ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள கால்வாய்களில் அகலப்படுத்துதல் பணி மற்றும் அதன் மீது சாலை அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டால் நகரில் போக்குவரத்தை குறைக்கும் வகையில் சைக்கிள், இருசக்கர இலகு ரக வாகனங்கள் இதில் செல்லும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவு நீரை இதில் விடும் நிலை தவிர்க்கவும், கழிவுகளை கால்வாய்களை கொட்டும் நிலையை தவிர்க்கப்படும் . இந்நிலையில் மழை நீரானது இந்த கால்வாய்கள் வழியாக தங்கு தடை இன்றி செல்லும்.

இது மட்டுமில்லாத இந்த கால்வாய் பகுதியை ஒட்டி உள்ள பகுதி மக்களின் சுகாதாரம் மேம்படும் என்பதால் பொதுமக்கள் இந்த திட்டத்தை பெரிதும் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News