சென்னை கோட்டத்தில் உள்ள 15 ரயில்வே நிலையங்கள் மறு சீரமைப்பு

பயணிகள் வசதிகளான இரண்டாவது நுழைவு வாயில், கழிவறைகள் , தங்குமிடம்‌, இருக்கைகள், சுற்றுப்புறம் தூய்மை படுத்துதல் என பல பணிகள் நடைபெறவுள்ளது.

Update: 2023-03-12 14:30 GMT

செங்கல்பட்டு ரயில் நிலையம்.(கோப்பு படம்)

சென்னை தென்னக ரயில்வே மண்டலம் சார்பில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் எனும் திட்டத்தின் கீழ் 15 ரயில்வே நிலையங்கள் மறு சீரமைப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களில் பொது மக்களுக்கு தேவையான கூடுதல் வசதி பணிகளை மேம்படுத்தும் திட்டமான அம்ரித் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் வரும் நிதியாண்டில் 15 ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர், அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை பீச், கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், பார்க், பெரம்பூர், சின்னமலை, சூலூர் பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 15 ரயில் நிலையங்கள் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்த செய்தி குறிப்பில் முதல் கட்டத்தில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் இதற்காக ஐந்தில் இருந்து 10 கோடி வரை ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் நிதி ஒதுக்கப்படும். இந்தத் திட்டப் பணி வரும் ஏப்ரல் 2023 முதல் துவங்கி நிதி ஆண்டான 2023-2024ல் முடிவு பெறும்.

முதல்கட்ட பணிகளில் லிப்ட், எஸ்கலேட்டர், இருக்கைகள், இரண்டாவது நுழைவு வாயில், கழிவறைகள், பயணிகள் தங்குமிடம், சுற்றுப்புறம் முழுவதும் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கான டெண்டர்கள் 14 ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இக்கூறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News